Basic Information Available In
English Français

Click here to quickly exit this site

தாம்பத்திய வன்முறை

தாம்பத்திய வன்முறை கலந்துரையாடப்பட வேண்டிய  ஒரு முக்கிய விடயமாகும் ஏனெனில் இது எவருக்குமே நடக்கலாம்.

கனடாவில் தாம்பத்திய வன்முறை அறிக்கைகளின் விளைவாக கிட்டத்தட்ட 40,000  கைதுகள் நடைபெற்றுள்ளன. மேலும்கியூபெக்கில் 4  இற்கு 1 என்ற அடிப்படையில் யாராவது ஒருவர் போலீஸிற்கு  அழைப்பை மேற்கொண்டு தாம்பத்திய வன்முறை தொடர்பாக புகாரளிக்கின்றனர்அதில் பாதிக்கப்படும் 10 பேரில் 8  பேர் பெண்களாகும்எனினும் கனடாவைப் பொறுத்தளவில் திட்டவட்டமான கணிப்பைப் பெறுவது கடினமாகவுள்ளது. ஏனெனில் தாம்பத்திய வன்முறை தொடர்பாகப் பல குற்றங்கள் போலீஸில் முறைப்பாடு செய்யப்படுவதில்லை.

I. தாம்பத்திய வன்முறை

தாம்பத்திய வன்முறை என்றால் என்ன?  

தாம்பத்திய வன்முறை அடிக்கடி வழமையாக  அதிகரிக்கும் நிகழ்வு மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகளின் மூலம் இனம்கண்டு கொள்ளமுடியும். அதிக பதற்றம், முறைகேடு, நியாயப்படுத்தல், சமரசம் மற்றும் அமைதியான காலம் என இவ்வன்முறைச் சுழற்சி வகைப்படுத்தப்படுகின்றது. அதாவது இந்தச் செயல்முறை வன்முறைச் சுழற்சி எனப்படுகின்றது. (வன்முறைச் சுழற்சி சம்மந்தமான தகவல்களுக்கு பகுதி II வன்முறைச் சுழற்சி)

இது இரண்டு துணைகளுக்கு இடையேயான சமத்துவமின்மையின் விளைவால்,  ஒரு துணை மற்றைய துணையின் மீது ஆதிக்கம் செலுத்துதல், கையாளுதல் மற்றும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகும். இது சமூக வர்க்கம், வயது, கலாச்சாரம் அல்லது மதம் என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் யாவருக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு, தாம்பத்திய வன்முறை என்பதை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

தாம்பத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழுள்ளவற்றுக்கு உட்பட்டிருப்பார்கள்:

  • அவமானப்படுத்தல்
  • தனிமைப்படுத்தல்
  • துன்புறுத்தல்
  • மிரட்டல்
  • அச்சுறுத்தல்
  • அவமரியாதைப்படுத்தல்
  • உடல் மற்றும் பாலியல் முறைகேடு
  • உணர்ச்சிகரமான பயமுறுத்தல்
  • நிதிக் கட்டுப்பாடு

துஸ்பிரயோகப்படுத்தும் துணையானவர் தங்கள் துணையை அவர்களின் வரவு செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை வேவு பார்ப்பதன் மூலமும் அவர்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்துகின்றனர். இறுதியாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு துணையானவர் தங்களின் துணை மீது ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் உளவியல் நிலையை நீடிக்கக் கூடும். ஆகையால்  தங்கள் தவறான உறவை முறித்துக் கொள்ளுவதற்கு  மிகவும் கடினமாகின்றது.

நினைவில் கொள்ளுங்கள்: ஒரு வாழ்க்கைத்துணை தங்களது வன்முறை நடத்தையை நியாயப்படுத்த மது, போதை மருந்துகள், மனவழுத்தம் என்பனவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம், அவை அவர்களின் நடவடிக்கைகளுக்கு  சாக்குப் போக்காகப் பயன்படுத்த முடியாது.

துஷ்பிரயோக வகைகள்:

வாய்வழித் துஸ்பிரயோகம்: இது மிரட்டல், அவமானப்படுத்தல் மற்றும் மற்றவரைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது. இது மறைமுகமாக அல்லது வெளிப்படையாக இருக்க முடியும்.

  • கத்துதல் அல்லது குரலை உயர்த்திப் பேசுதல்
  • மற்றவர்களின் செயற்பாடுகளுக்குப் பாதிக்கப்பட்டவர் மேல்  குற்றம் சுமத்துவது
  • அவமானப்படுத்தல்

உளவியல் துஸ்பிரயோகம்: இது பிரதானமாக ஒரு தனிப்பட்ட நபரின் அணுகுமுறை மற்றும் முதன்மையான செயற்பாடுகளுடன் மேற்கொள்ளப்படுகின்றது. இத்துஸ்பிரயோக நடவடிக்கை ஒரு தனி நபரின் உளவியல் ஒருமைப்பாட்டை  இலக்கு வைக்கின்றது. இது வாய்வழித் துஸ்பிரயோகம் போன்றது. உளவியல் துஸ்பிரயோகம் நுட்பமான அல்லது மிகவும் கடுமையானதாக இருக்கும்.

  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து தனிமைப்படுத்தல்
  • அவமானப்படுத்துதல், மிரட்டல்
  • பாதிக்கப்பட்டவரை நேரடியாக அல்லது  மறைமுகமாக அச்சுறுத்தல். ( உ+ம்: உங்கள் துணை உங்கள் குழந்தைகளைக் கடத்துதல் அல்லது கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுதல்)

பாலியல் துஸ்பிரயோகம்: இது ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக இழைக்கப்படும் இயற்கையான பாலியல் நடவடிக்கைகளும் அடங்கும். ( உடல்ரீதியான மற்றும் அல்லாத தொடர்பு ) விருப்பமின்மையை முடியாதென்று கூறுவதன் மூலம் அல்லது  வேறு ஏதாவது உடன்பாடில்லாத  செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தல். (உ+ம்: உங்கள் துணையை உங்களிடமிருந்து தள்ளி விடுதல் அல்லது சாதாரண அறிகுறிகள் மூலம் உங்கள் சங்கடமான நிலையைக் காட்டுதல் என்பன உங்கள் விருப்பமின்மையை வெளிப்படுத்தப் போதுமானது)

  • ஒருவருடைய விருப்பத்திற்கு எதிரான பாலியல் ரீதியான தொடுகை அல்லது பாலியல் நடவடிக்கை.
  • ஒருவரை ஆபாச வழிமுறைகளுக்குப் பயன்படுத்தல்
  • ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்தல் (பணியிடம்,  பாடசாலை அல்லது வீதிகளில்)

எப்போதும் நினைவில் கொள்ளவும்: எப்போதுமே ஒருவருடைய விருப்பம் அவர்களைக் கட்டாயப்படுத்தாமலே பெறப்பட வேண்டும்.

உடல் துஸ்பிரயோகம்: இது ஒருவருக்கு எதிரான வன்முறைகளால் வகைப்படுத்தப்படும். உறவுமுறைக்குள் உடல் துஸ்பிரயோகம் நடைபெறும் போது அது வாய்வழி,  உளவியல் அல்லது பாலியல் இணைந்ததாக இருக்க அதிக சாத்தியமுண்டு.

  • கடித்தல், கிள்ளுதல் அல்லது தள்ளுதல்
  • அடித்தல்/ குத்துதல், உதைத்தல்
  • அடைத்து வைத்தல்
  • ஆயுதத்தைக் கொண்டு அச்சுறுத்தல்
  • மரண அச்சுறுத்தல்
  • பொருட்களை எறிதல்

பொருளாதாரத் துஷ்பிரயோகம்: இது ஒரு துணையின் பொருளாதார சுதந்திரத்தை தடுக்கின்றது. இத்துஸ்பிரயோகத்தின் வடிவம் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்த கூடியது.

  • அவர்களது துணையை வேலையில் இருந்து தடுத்தல் அல்லது திடனற்றுப் போகச் செய்தல்.
  • தங்களது வாழ்க்கைத்துணைகளின் நிதி நிலையினைக் கட்டுப்படுத்தல்.
  • அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையின் சம்பளம் அல்லது வருமான ஆதாரங்களைப் பறிமுதல் செய்தல்.

ஆன்மீக துஸ்பிரயோகம்: இது தங்கள் வாழ்க்கைத்துணையை குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும்படி வற்புறுத்தல் அல்லது அவர்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்றத் தடை விதிப்பதாகும்.

  • ஒரு மதத்தைப் பின்பற்றுமாறு  அல்லது வேண்டாமென்று அச்சுறுத்தல்
  • ஒரு ஆன்மீக (சமய) மையத்திற்குச் செல்லத் தடை விதித்தல்
  • ஆன்மீக மையத்திற்குச் செல்லும்படி வற்புறுத்தல்
  • ஒருவரது மதத்தை இழிவு படுத்தல்

நான் எப்படி உணருகின்றேன்? 

 பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள எந்தக் குறிப்பிட்ட உணர்வுகளும் இல்லை எனினும், பின்வரும் உணர்ச்சிகள் ஒரு பொதுவான முன்னோக்காகக் கருதப்படுகின்றது.

  • உங்கள் வாழ்க்கைத்துணை மீது பயமாக இருக்கலாம்
  • நீங்கள் தனிமை, களைப்பு,  பயம் மற்றும் உதவியற்றவராக உணரலாம்
  • நீங்கள் மனவழுத்தம் மற்றும் குழப்பத்தில் இருக்கலாம்
  • நீங்கள் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பையிட்டுக் கவலையாக இருக்கலாம்

உங்கள் வாழ்க்கைத்துணை  எப்படிச் செயற்படுவார்?

  • அவர்கள் அடிக்கடி சிறு சம்பவங்களைக் கூடப் பெரிதாக்கலாம்
  • அவர்கள் மிகவும் பொறாமையுடன் நடக்கலாம்,  அந்தப் பொறாமை அன்பின் அடையாளம் என அடிக்கடி கூறலாம்
  • உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் மதிப்பைக் குறைத்து உங்களைச் சமூக ஆதரவில் இருந்து தனிமைப்படுத்தலாம்
  • அவர்கள் சமுதாயத்தில் பாலினத்தின் கதாபாத்திரம் பற்றிய அடிப்படைக் கருத்துக்களைப் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.
  • முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவது சரியானது என நம்பலாம்

 என் குழந்தைகள் மீதான துஸ்பிரயோகத்தின் விளைவுகள்

தாம்பத்திய வன்முறையை அனுபவிக்கும் குழந்தைகளின் உணர்வின் வெளிப்பாடு ஒரு ஏற்ற, இறக்கம் போன்றது.  குழந்தைகள் மீதான வன்முறை விளைவின் வெளிப்பாடுகள் வயதுக்கு வயது வேறுபடுகின்றது.

  • கைக்குழந்தைகள் மீதான பாதிப்பு:
    • எளிதில் திடுக்கிடும் மற்றும் பயத்துடன் கூடியவர்களாக இருப்பார்கள்
  • பள்ளி வயது குழந்தைகள் மீதான பாதிப்பு:
    • சுயமரியாதைக் குறைவு மற்றும் பாடசாலையில் கவனக் குறைவானவர்களாக இருக்கலாம்
  • பருவ வயதினர் மீதான பாதிப்பு:
    • மனவழுத்தம், பதற்றம் என்பனவற்றால் பாதிக்கப்பட்டு தங்கள் உணர்ச்சிகளை மறக்க போதைப் பொருட்களின் பக்கம் திரும்பலாம்

தாம்பத்திய வன்முறையை நேரில் காணும் குழந்தைகள் அவர்களும் அதே உத்திகளைக் கற்றுக் கொள்ள முனைவதோடு,  ஆரோக்கியமற்ற மற்றும் தவறான உறவுமுறைகளுக்கு  இட்டுச் செல்லும் வன்முறைப் பழக்க வழக்கங்களையும் இயல்பானதாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் அதிகமாகின்றது. ஒவ்வொரு குழந்தையினதும் வன்முறை அனுபவம் தனித்துவமாக இருக்கும் போது வன்முறையின் வெளிப்பாட்டை நிறுத்துவது தான் நீங்கள் செய்யக்கூடிய ஒரு நல்ல விடயமாகும். குடும்பம்,  நண்பர்கள் மற்றும் சமூக சேவையாளர்களின் ஆதரவுடன் உங்கள் குழந்தைகள் செழிப்பாக வளர முடியும்.

II. வன்முறைச் சுழற்சி

வன்முறைச் சுழற்சியில் நான்கு கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டமும் துஷ்பிரயோகப்படுத்துபவரின் நடத்தை மற்றும் பாதிக்கப்பட்டவர் மீதான செயற்பாட்டின் விளைவைக் குறிக்கும். இச்சுழற்சியில் உறவுமுறைக்குள் உடல் ரீதியாக ஏற்படுத்தும் வன்முறை மிகவும் வெளிப்படையாக உள்ளது (உடல், உளவியல், பொருளாதாரம், ஆன்மிகம் மற்றும் பாலியல்). எனினும் வன்முறைச் சுழற்சி துஷ்பிரயோகத்தின் வடிவத்தைப் பொருட்படுத்தாமல் உள்ளது. இது ஒருவருக்கொருவர் அதன் நீடிப்பு மற்றும் தீவிரம் வேறுபடுகின்றது.

Screenshot 2015-03-29 20.50.24

வன்முறைச் சுழற்சி ஒவ்வொரு வன்முறை நிகழ்வின் பின் குறுகிய நேர இடைவெளியில் மீண்டும் தொடர்கின்றது. மேலும் வன்முறையின் உச்சக் கட்டம் திருமணம் சார்ந்த கொலை என்பதை நினைவில் கொள்வது இன்றியமையாதது.

ஆகவே வன்முறைச் சுழற்சியை நிறுத்த ஒரே வழி அமைதி நிலையைக் கலைக்க வேண்டிய அவசியமாகின்றது.

(1) பதற்றம் அதிகரித்தல்

  • பல சிறிய சம்பவங்கள் நீண்டகாலமாக நிகழல்.
  • இந்தச் சம்பவங்கள், விமர்சனங்கள் அல்லது வெளிப்படையான தோற்றப்பார்வை ஒருவரில் நடத்தை மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
  • வன்முறை வழக்கமாகப் பாதிக்கப்பட்டவருக்கு கவலை மற்றும் பயத்தினை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக வன்முறை அதிகரிப்பதைத் தவிர்க்கும்  பொருட்டு அவர்களின் துணைகளோடு மிகவும் கவனமாக நடந்து கொள்கின்றனர்.
  • பாதிக்கப்பட்டவர் இந்த நிலைமைக்கு பொறுப்பாக உணர்வதோடு மற்றும் வன்முறை ஒரு பாகம் எனவும் நம்புகின்றனர்.

(2) வன்முறை வெடிப்பு 

  • வன்முறை மோசமானது
  • வன்முறை சில நிமிடங்களில் இருந்து சில நாட்கள் வரை நீடிக்க முடியும்
  • பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி மற்றும் குழப்ப நிலையிலிருப்பார்
  • பாதிக்கப்பட்டவர் சக்தியற்றவராக உணர்தல்

(3) நியாயப்படுத்தல்

  • துஷ்பிரயோகம் செய்தவர் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முனைதல்.
  • பாதிக்கப்பட்டவர் இந்த நியாயத்திற்குட்பட முடியும்.
  • பாதிக்கப்பட்டவர் தங்கள் துணைவர்கள் செய்தது குற்றமா, இல்லையா என தங்களைத் தாங்களே கேள்வி கேட்கத் தொடங்குகின்றனர்.

(4) அமைதி மற்றும் சமரச காலப்பகுதி

  • துஷ்பிரயோகம் செய்த துணை தன்னை மன்னிக்குமாறு கெஞ்சுதல் மற்றும் வன்முறை இனிமேல் நடைபெறாதென உறுதியளித்தல்.
  • துஷ்பிரயோகம் செய்தவர் தனது நடத்தையை மாற்றிக் கொள்வதாகக் கூறுதல், அதைப் பாதிக்கப்பட்டவர் நம்புதல்.
  • துஷ்பிரயோகம் செய்தவர் இரக்கம் மற்றும் அன்பு காட்டுதல்.

கடைசிக் காலகட்டத்தின் நீளம் வேறுபடலாம் மற்றும் சில உறவுகளிற்கு மத்தியில் இது இல்லாமலும் இருக்கலாம். எனினும் சமரச காலகட்டத்தில் வன்முறை நிகழ்ந்து வன்முறைச் சுழற்சி மீண்டும் தொடங்கும்.

III. பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல் மற்றும் உங்களுக்கு நீங்களே உதவுதல்

தாம்பத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர் ஒருவரைத் தெரிந்தால் நான் என்ன செய்ய முடியும்?

வழமையாகத் தாம்பத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தனிமையாகவும் மற்றும் பயம் நிரம்பியவர்களாகவும் உணர்வார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு உதவத் தயக்கமாக இருந்தாலும் கூட,  ஆதரவு வழங்க நீங்கள் இருப்பதாகக் காட்டும் ஒரு எளிமையான செயலே அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்க முடியும்.

ஒரு பாதிக்கப்பட்டவர் உங்களுடம் மனம் திறந்து பேச நினைத்தால் அவர்கள் சொல்வதை மதிப்பீடு செய்யாமல் காது கொடுத்துக் கேட்கவும். இருப்பினும் பாதிக்கப்பட்டவரும் நீங்களும் ஒரு பாதுகாப்பான சூழலில் இருக்கின்றீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அத்தோடு பாதிக்கப்பட்டவரின் துணைவருக்கு முன்  இப்பிரச்சனையைப் பற்றிக் கலந்துரையாடுவதைத் தவிர்க்கவும்.

இறுதியாக பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவுக் குழுக்களை நாடி அவர்களின் உரிமைகள் பற்றிய தகவல்களைப் பெறவும் மற்றும் ஆதரவு சேவை போன்றவற்றை அணுகி சமூக சேவையாளர்களுடன் பேசவும் உதவி புரியவும்.

நான் தாம்பத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர் என்றால் என்ன செய்ய வேண்டும்?

  • உங்களை நீங்களே தனிமைப்படுத்த வேண்டாம், உங்களின் நிலைமையைப் பற்றி உங்களுக்குச் சௌகரியமானவருடன் பேசுவது மிக முக்கியமானது.
  • வெளிச் சேவைகளை நாடுதல், நீங்கள் கூறுவதைச் செவிமடுத்து உங்களுக்கான உரிமைகள் பற்றிய தகவல்கள் மற்றும் பல்வேறு தெரிவுகளைத் தரக்கூடிய சமூக சேவையாளர்களுடன் பேசி உதவிகளைப் பெறுவதற்குப் பல வளங்கள் உள்ளன.  அத்தோடு இச்சேவைகள் அனைத்தும் இலவசமானதும்,  இரகசியமானதும்
  • போலீஸிற்குத் தொடர்புகொண்டு சம்பவம் பற்றி முறையிடவும். பின்பு சம்பவத்தைக் குறிப்பிட தேவைப்படும் பொருட்டு அறிக்கை எண்ணை எழுதி வைத்துக் கொள்ளவும்
    • போலீஸில் சம்பவத்தை முறையிட்ட பின்னர் உங்கள் துணைக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வது உங்களைப் பொறுத்ததல்ல மற்றும் உங்களுக்கு விருப்பம் இல்லாவிடினும் போலீஸ் உங்கள் துணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
    • நான்கிற்கு ஒன்று என்ற அடிப்படையில் யாராவது ஒருவர் போலீஸிற்குத் தொடர்பை மேற்கொண்டு தாம்பத்திய வன்முறை தொடர்பாகப் புகார் அளிக்கின்றனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
  • தங்குமிடம் செல்லவும், உங்களின் வீட்டில் நீங்கள் பாதுகாப்பின்மையாக உணர்ந்தால் ஒரு தங்குமிடத்திற்குச் செல்லவும். தங்குமிடங்கள் பாதுகாப்பானதும், இரகசியமானதும். இங்கே நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தங்க முடியும் மற்றும் சமூக சேவையாளர்களின் உதவியை இலகுவாக அணுக முடியுமென்பதோடு உங்களுக்கான புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கவும் அவர்கள் உதவுவார்கள்.
    • தங்குமிடங்களில் வழங்கப்படும் சேவைகள்: தனிப்பட்ட ஆலோசனைகள், ஆதரவுக் குழுக்கள்,  துணையாகச் செல்லல்.
    • சில தங்குமிடங்களில் உங்களது மொழிகளில் பேசக் கூடிய சமூக சேவையாளர்கள் உள்ளனர். ஆகையினால் உங்களுக்கு வசதியான மொழியில் தகவல்களை வழங்க முடியும். இச்சேவைகள் அனைத்தும் இலவசமானது மற்றும் சமூக சேவையாளர்களுடன் பகிரப்பட்ட அனைத்துத் தகவல்களும் இரகசியமானது.

நீங்கள் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவராயின்,  நீங்கள் தனிமையானவர் அல்ல மற்றும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உரிமையுண்டு! உதவி கேட்க அஞ்ச வேண்டாம்.

IV. அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

வீட்டு வன்முறை தனிப்பட்ட அல்லது பொதுவான பிரச்சனையா?

  • வீட்டு வன்முறை தனிப்பட்ட பிரச்சனையாகக் கருதப்படவில்லை மாறாக இது வெளிப்படையாக கலந்துரையாடப்பட வேண்டிய ஒரு சமூகப் பிரச்சனையாகும். மேலும் கனடியச் சட்டம் இதை ஒரு தாம்பத்திய வன்முறைக் குற்றமாகக் கொண்டுள்ளது.
  • அத்துடன் தாம்பத்திய வன்முறை தனிப்பட்ட விஷயம் என்னும் கருத்து பாதிக்கப்பட்டவரை இன்னும் கூடுதலாக ஒதுக்கி வைத்தல் மற்றும் துணையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும். அத்தோடு அவர்கள் எந்தவிதமான உதவியை நாடுவதற்கும் தடைவிதிப்பதாகும்.

ஏன் ஒரு பெண் வன்முறையான உறவு முறைக்குள் அவளின் துணையோடு வாழ வேண்டும்?

  • ஒரு பெண்ணானவள் அவளின் துஸ்பிரயோகப்படுத்தும் துணையோடு வாழ முடிவு செய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. சில பெண்கள் தங்கள் துணைவர் தன்னை மாற்றிக் கொள்ளுவார் என நம்புதல் ( அவர்களது வன்முறை நடத்தையைக் கைவிடல் ) மேலும் சிலர் தங்கள் குடும்பம் உடைவதைப் பற்றிக் குற்றவுணர்வு கொள்ளல். மற்றும் சில பெண்கள் தாங்கள் பொருளாதார ரீதியாக சுயாதீனமாகச் செயற்பட முடியாதென நம்புகின்றனர்.

ஒரு துணை தனது வன்முறைப் பிரச்சனை சம்மந்தமாக உதவியை நாடினால்,  துஸ்பிரயோகம் நிறுத்தப்படுமா?

  • சிகிச்சை முறை வன்முறை நடத்தையை அடையாளம் காண உதவும் ஆனால் அது ஒரு நல்ல தீர்வாக அமையாது. துணையின் மாற்றத்தை நோக்கிய முதற்படி அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வதாகும். வன்முறையின் விளைவுகள் ( உடல் மற்றும் உணர்வு ரீதியான உட்பட ) தானாக விலகிச் செல்ல மாட்டாது.  துஸ்பிரயோகத்தின் பாதிப்பிலிருந்து குணமாக, பாதிக்கப்பட்டவர் ஒரு வழியை நாடுவது மிக முக்கியமானது. ( உ+ ம் சமூக சேவையாளருடன் பேசுதல்,  ஒரு ஆதரவுக் குழுவை நாடுவதன் மூலம், மேலும் பல.)

ஒரு ஆண் தாம்பத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவராக இருக்க முடியுமா?

  • ஆம். தாம்பத்திய வன்முறை, உறவுமுறைக்குள் ஆதிக்கம் செலுத்துவது என்பதன் அடிப்படை உண்மையின் காரணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இக்குற்றத்தினால் பாதிக்கப்பட்டவராக இருக்க முடியும். உண்மையிலே, கியூபெக்கில் பதிவாகிய தாம்பத்திய வழக்குப் பதிவுகளில் கிட்டத்தட்டப் பாதிக்கப்பட்டவர்களில் 15  வீதமானவர்கள் ஆண்களாகும்.
கனடா குற்றவியல் கோவையின் இல்லற வன்முறை மற்றும் நீதிமன்றம் நடைமுறை

இல்லற வன்முறை என்பது ஒரு உலகளாவிய பிரச்சனையாகும். இது பாலினம், பொருளாதார நிலை, இனம் அல்லது மதப்பிணைப்பு என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கககூடியது.

சர்வதேச சட்டத்தில் பெண்களை இல்லற வன்முறையில் இருந்து பாதுகாப்பதற்காக பல மாநாடுகள் மற்றும் உடன்படிக்கைகளும் உள்ளன. கனடாவில் இல்லற வன்முறை பொறுத்துக்கொள்ள முடியாதது. உண்மையிலேயே, தற்போது கனேடிய அரசாங்கம் உறவுமுறைக்குள் இல்லற வன்முறை  மற்றும் பல்வேறு நடவடிக்கைகளைச் குற்றச் செயலாக்கியுள்ளது.

ஆகையினால், உங்கள் நாடு முன்வைத்துள்ள சட்டங்களைப் பொருட்படுத்தாமல், நீங்கள் கனடாவிற்கு வந்ததுமே அந்நாட்டின் சட்டம் உங்களுக்குப் பொருந்துகின்றது.

 

வன்முறையின் வடிவங்கள்

முன்பகுதியில் இல்லற வன்முறையில்  குறிப்பிட்டது போன்று பல்வேறுவகையான துஸ்பிரயோகங்கள் உள்ளன. ஒரு நபர் கீழுள்ள வன்முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்களால் பாதிக்கப்பட முடியும்.

  • உடல் துஸ்பிரயோகம்
  • பாலியல் துஸ்பிரயோகம்
  • உணர்ச்சி பூர்வமாக அல்லது உளவியல் துஸ்பிரயோகம்
  • நிதித் துஸ்பிரயோகம்
  • அலட்சியப்படுத்தல்

கனடிய குற்றவியல் சட்டத்தின்படி அனைத்து விதமான துஸ்பிரயோக வடிவங்களும் குற்றமாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும், துஸ்பிரயோகம் குற்றப்படிவத்தில் இல்லையெனில் (உ+ம்: உளவியல் துஸ்பிரயோகம்) தாம்பத்திய வன்முறை நடைபெறவில்லை என்று அர்த்தமில்லை. வன்முறைச் சுழற்சியை தெரியப்படுத்தும் சமூக சேவையாளர்கள் உட்பட உங்களுக்கு உதவி புரியக்கூடிய வளங்கள் உள்ளன.

 

குற்றவியல் சட்டத்தில் தாம்பத்திய வன்முறை

 

(1) உடல் துஸ்பிரயோகம்

உடல் துஸ்பிரயோகம் என்பது குற்றவியல்  சட்டத்தின்படி, ஒரு நபருக்கெதிராக அவரின் அனுமதியின்றி திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் உடல்ரீதியான துஸ்பிரயோகம் ஆகும். இது உடல் வலி அல்லது குறுகிய கால மற்றும் நீண்டகால காயங்களை ஏற்படுத்தலாம். உடல்ரீதியான துஸ்பிரயோகத்தில் உள்ளடக்கப்பட்டவை:

  • தள்ளுதல் அல்லது நசுக்குதல்
  • அடித்தல், அறைதல் அல்லது உதைத்தல்
  • குத்துதல் (கூறிய ஆயுதம்) வெட்டுதல்
  • துப்பாக்கியால் சுடுதல்
  • ஒருவர் மீது பொருட்களால் எறிதல்
  • எரித்தல்
  • ஒருவர் பாதிக்கப்பட்டவரை தாக்கும் போது மற்றவர் பாதிக்கப்பட்டவரை இறுக்கிப் பிடித்தல்
  • அறையில் பூட்டி வைத்தல் அல்லது கட்டி வைத்தல்
  • கொலை செய்தல்

இவ்வனைத்து நடவடிக்கைகளும் கனடாவில் குற்றமாகக் கருதப்படுவதோடு குற்றவியல் கோவையில் பிரதானமாக தாக்குதல், உடல் தாக்குதல் அல்லது கடுமையான தாக்குதல் (அதிகாரம் 265ss. ) அதேபோல் ஆட்கொலை, கொலை அல்லது கொலைக்குற்றம் (அதிகாரம் 2.22ss.)  என்பதின் கீழ் அடையாளம் காண முடியும்.

 

(2) பாலியல் துஸ்பிரயோகம்

 

குற்றவியல் கோவையின்படி பாலியல் துஸ்பிரயோகம் என்பது ஒருவரது அனுமதியின்றி பாலியல் ரீதியாகத் தொடுதல் அல்லது பாலியல் நடவடிக்கை, நிறுத்தும்படி கோரிய போதும் தொடர்ச்சியான பாலியல் ரீதியான தொடர்பு மேற்கொள்ளல், ஒரு நபரைக் கட்டாயப்படுத்தி பாதுகாப்பற்ற அல்லது இழிவுகரமான நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தல் என்பன உள்ளடங்கும்.

  • கனடாவில் கணவன், மனைவி கூட பாலியல் உறவு கொள்ள ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும் (அதிகாரம் 278)

ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு மறுப்புத் தெரிவிப்பதென்பது வாய்மொழி மூலமாகவோ (விருப்பமின்மையைக் கூறல்) செய்கையின் மூலமாகவோ அவர்களின் விருப்பமின்மையை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

ஒருவரின் ஒப்புதலின்றி மேற்கொள்ளப்படும் அனைத்துப் பாலியல் நடவடிக்கைகளும் கடனடாவில் ஒரு குற்றமாகக் கருதப்படும் மற்றும் குற்றவியல் கோவையில் “பாலியல் தாக்குதல்” (அதிகாரம் 271 ss) என்பதின் கீழ் காணலாம்.

 

(3) உணர்ச்சிபூர்வமான அல்லது உளவியல் துஸ்பிரயோகம்

பெரும்பாலான உணர்வுரீதியான துஸ்பிரயோகங்களின் வடிவங்கள் கனடாவில் குற்றமாகக் கருதப்படுவதில்லை. இவைகள் தொடர்ந்து சென்றால் வன்முறை மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும் என்று குறிக்க முடியும்.

உணர்வு அல்லது உளவியல் ரீதியான துஸ்பிரயோகம் என்பது ஒரு நபர் வார்த்தைகள் மூலம் அல்லது நடவடிக்கையின் மூலம் மற்றைய நபரை கட்டுப்படுத்த முயற்சித்தல், அவர்களின் மரியாதையைக் குறைத்தல் அல்லது ஒருவரைத் தனிமைப்படுத்தல் என்பனவாகும். இத்துஸ்பிரயோகத்தின் வடிவத்தில் உள்ளடக்கப்பட்டவை:

  • அச்சுறுத்தல், பட்டப் பெயர் சூட்டி அழைத்தல், அவமரியாதை செய்தல்
  • கூக்குரலிட்டுத் திட்டுதல் அல்லது விமர்சித்தல்
  • மற்றைய நபர்களின் செயல்களை மிகவும் கட்டுப்படுத்தல் (உ+ம்: அவர்களின் குடும்பம், நண்பர்களைச் சந்திப்பதற்குத் தடைவித்தித்தல்)
  • வம்பிழுத்தல்: அச்சுறுத்தல் அல்லது அவமானப்படுத்தல்
  • பின்தொடர்தல்

கனடாவில் உணர்வுரீதியான துஸ்பிரயோகங்கள் குற்றமெனக் கருதப்படுபவை கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன:

 

  • ஒருவருக்கு அல்லது ஒருவருடைய உடமைக்கு தீங்கு செய்வதாக அச்சுறுத்தல் அல்லது கொலை அச்சுறுத்தல் விடுத்தல் (அதிகாரம் 1)
  • குற்றவியல் தொந்தரவுகள் (பின்தொடர்தல்) பலமுறை ஒருவருக்கு தொடர்பு மேற்கொள்ளல் அல்லது அவரைப் பின்தொடர்தல் என்பன கனடாவில் குற்றமாகக் கொள்ளப்படுகின்றது. இதைப்பற்றி குற்றவியல் கோவை கட்டுரை 264 கின் கீழ் காணலாம்.

 

(4) நிதி சம்மந்தமான துஸ்பிரயோகம்

நிதி துஸ்பிரயோகம் என்பது ஒருவர் மற்றவருடைய பணம் அல்லது சொத்தை தாங்கள் பயன்படுத்துதல் அல்லது கட்டுப்படுத்த முயற்சித்தல் அல்லது அபகரித்தல் ஆகும். இது அவர்களுக்கு விருப்பமற்ற ஆவணங்களில் கையெழுத்திட அழுத்தம் கொடுத்தல் அல்லது அவர்களுக்கு சொந்தமானவற்றை விற்பனை செய்யும்படி கட்டாயப்படுத்தல் அல்லது உயில் மாற்றம் செய்தல் என்பனவாகவும் இருக்க முடியும்.

ஆகையினால், திருட்டு (அதிகாரம் 322)  உட்பட வழிப்பறி (அதிகாரம் 343) மோசடி (அதிகாரம் 341) ஆகிய பெரும்பாலான நிதித் துஸ்பிரயோக வடிவங்கள் கனடாவை பொருத்தவரை குற்றமாகவே கருதப்படும்.

 

(5) புறக்கணித்தல்

ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஒருவரைக் கவனித்துக் கொள்ளும் உரிமை இருக்கும் போது, அவர் அந்த நபருக்கான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறும் பட்சத்தில் புறக்கணிப்பு நடைபெறுகின்றது. இவைகளில் பின்வருவன அடங்குகின்றது:

  • முறையான உணவு, உடை வழங்காமை
  • போதுமான சுகாதார வசதிகள், மருந்து அல்லது தனிப்பட்ட சுகாதார தேவைகளை அளிக்கத் தவறுதல்
  • தீங்கிலிருந்து பாதுகாக்கத் தவறுதல்
  • முறையாகக் கண்காணிக்கத் தவறுதல்

 

இருப்பினும் அனைத்துவிதமான புறக்கணிப்புகளும் கனடாவில் குற்றமாகக் கருதப்படுவதில்லை. (அதிகாரம் 215.16) தங்களைச் சார்ந்திருக்கும் குழந்தையின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் பெற்றோர்களுக்கு நிபந்தனை விதிக்கின்றது அதேபோல் குழந்தைகளை அநாதரவாகக் கைவிடுவதும் கனடாவில் குற்றமாகக் கருதப்படுகின்றது.

மேலும் குழந்தைகளை இவ்விதமான துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாக்கும் சிறப்புச் சட்டங்களும் உள்ளன என்பதை நினைவில் வைத்துக் கொள்வது மிக முக்கியமானது.

ஒரு பெற்றோர் இத்துஸ்பிரயோக வடிவங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றால் சந்தேகிக்கப்பட்டால், குழந்தைகளின் சிறந்த நலனுக்காக அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இளைஞர் பாதுகாப்புத்துறை தலையிட முடியும்.

இறுதியாக, சட்டத்திற்கமைய ஒருவர்  இந்தக் குற்றங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றால் பாதிக்கப்பட்டவராக உணர்ந்தால், அவர்கள்  தங்களுக்கு குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும். அதேபோல்  வீட்டுப் பிரச்சனையில் போலிசாரின் தலையீடு கோரப்பட்டால் அவர்களும் குற்றச்சாட்டுக்களுக்கெதிராக வழக்குத் தொடர முடியும். குற்றமிழைத்தவருக்கு  எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அரசாங்கத்தினாலேயே தொடரப்படுகின்றன. ஆகையினால் பாதிக்கப்பட்ட நீங்கள் வழக்கின் முதன்மைச் சாட்சியாளராவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது மிக முக்கியமானது. சாட்சியளிக்கும் நடைமுறை ஒரு நீண்ட மற்றும் கடினமான ஒன்றாக இருக்க முடியும். ஆகையினால் நாம் பின்வரும் பகுதியில் இந்த நடைமுறை பற்றிய தகவல்களை வழங்க உத்தேசித்துள்ளோம்.

 

வளங்கள்

தாம்பத்திய வன்முறையின் எந்த  வடிவமும் கனடாவில் பொறுத்துக்கொள்ள முடியாதது. உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய கவலை உங்களுக்கு இருப்பின்,  உங்களுக்கு உதவுவதற்குப் பல வளங்கள் உள்ளன:

  • அவசர தேவைக்கு:  போலீஸ் 911 இலக்கத்திற்கு  அழைப்பை மேற்கொள்ளவும்
  • தாம்பத்திய வன்முறை: 1-800-363-9010, இவர்கள்  பல்வேறு தங்குமிடங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தித் தருவார்கள்.
  • வெளிச் சேவைகளுக்கு ஷீல்ட் ஒவ் அதினா: : 1-877-274-8117 

ஒரு வழக்கறிஞரைக் கண்டுபிடிக்க:

Legal aid (அனுமதிக்கப்பட்டால்): 514-864-2111
Rebâtir (4 மணிநேர இலவச சட்ட ஆலோசனை) : 1-833-732-2847

ஞாபகத்தில் கொள்ளவும்… துஸ்பிரயோகத்தில் இருந்து விடுதலை பெறுவது உங்கள் உரிமை மற்றும் வன்முறைச் சுழற்சியை உடைத்து விடுதலை பெறவும் முடியும்!

நீதிமன்ற நடைமுறை மற்றும் சாட்சியளித்தல்

குற்றச்செயல் நடைபெறும் போது, பாதிக்கப்பட்டவர் அல்லது போலீஸ் குற்றமிழைத்தவருக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்யமுடியும். குற்றத்திற்கு எதிராக குற்றப்பதிவு மேற்கொள்ள முடிவு செய்துவிட்டால், அதைப் பற்றிக் குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்வது மிகமுக்கியமானது. நீங்கள் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றச்சாட்டைப் பதிவு செய்யத் தேர்ந்தெடுப்பது வெறுமனே உங்களை அல்லது உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே.

தனி உரிமைகள் சம்மந்தமான மற்றும் குற்றவியல் வழக்கிற்கு இடையேயான நீதிமன்ற நடைமுறையின் வேறுபாடு என்ன?

  • தனி உரிமைகள் சம்பந்தமான  வழக்கு என்றால் (விவாகரத்து அல்லது தடுப்புக் காவல்):
    • உதாரணமாக விவாகரத்து நடைமுறையின் போது ஒரு தடவை தனிநபர் மோதல்கள் எழுந்துள்ளன, இதன்போது உங்களை நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் உங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்ய உதவும் வழக்கறிஞருடன் பேசுவதற்குப் பரிந்துரைக்கப்படும். இந்நடைமுறை முழுவதும் உங்களுக்கு உணர்வு ரீதியாக ஆதரவு வழங்குவதற்கு ஒரு சமூக சேவையாளருடன்  பேச முடியும்.
  • இது ஒரு குற்றவியல் வழக்கு என்றால் (உ+ம் தாம்பத்திய அல்லது குடும்ப வன்முறை):
    • போலீசில் முறைப்பாடு செய்து முடிந்தவுடன் உங்கள் வழக்கு, வழக்கறிஞருடன் இணைந்து செல்ல வேண்டுமா என்பதை குற்றவியல் புலன்விசாரனையாளர் முடிவு செய்வார். உங்களுக்குத் தீமை விளைவித்தவருடன் விசாரணையைத் தொடரலாமா, இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் வழக்கறிஞருக்கு உண்டு.
    • உங்கள் வழக்கு விசாரணைக்குச் சென்று விட்டால், நீங்கள் தானாகவே இந்த வழக்கின் முதன்மைச் சாட்சியாகிவிடுவீர்கள். எனினும், உங்களுக்கு சாட்சியளிக்க விருப்பமா, இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் சாட்சியளிக்க தேர்வு செய்தால்,  நீதிமன்றத்தில் அவ்வாறு செய்ய வேண்டும்.
    • ஒருமுறை உங்கள் வழக்கு இந்நிலையை அடைந்ததும், உங்கள் ஆரம்ப முறைப்பாட்டைத் திரும்பப்பெறும் அதிகாரம் சாத்தியமற்றது. வழக்கறிஞர் உங்களுக்குத் தீமை விளைவித்தவரைத் தொடரத் தெரிவு செய்தால், வழக்கு முற்று முழுதாக உங்கள்  கையை விட்டுப்போய்விடும்.

குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கை (அட்டவணை)

JudicialProcessTamil

 

நீதிமன்றத்தில் யார் உள்ளனர் மற்றும் என்ன செய்வார்கள்?

  • நீதிபதி என்ன செய்வார்?
    • நீதிபதி தான் இறுதி முடிவைத் தீர்மானிப்பவராகும். தீர்ப்பு வழங்குமுன் நீதிபதி இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்துக் கேட்டு அதன்பின் உண்மைகளை விளங்கி சட்டத்தைச் செயற்படுத்துவார்.

!: நீதிபதி ஒழுக்கறெித் தரத்திற்கேற்ப ஒருவரது நடத்தையை மதிப்பீடு செய்ய முடியாது மாறாக சட்டதிட்டத்திற்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.  நீதிமன்றத்தில் இருப்பவர்கள்  எவரும் நீதிபதி உட்பட, ஒரு அணுகுமுறை தவறானது அல்லது சரியானது என்று கூறுவதற்கல்ல. ஆனால் சட்டம் அல்லது சட்ட விரோதமானது என்பது மட்டுமே கூற முடியும்.

 

  • முடிசூடிய வழக்கறிஞர்கள் என்ன செய்வார்கள்?
    • முடிசூடிய வழக்கறிஞர்கள் மாநில பிரதிநிதித்துவம் அதே நேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கும். இதன் அர்த்தம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் அமர்ந்திருப்பார்கள் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நலன்களைப் பிரதிபலிப்பதில்லை. இவர்களுடைய பங்கு மாநில விதிகள், சட்டங்கள் ஒவ்வொரு பக்கமும் மதிக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஒரு நியாயமான விசாரணை கிடைக்கின்றதா என்பதாகும். சுருக்கமாக, குற்றம் சுமத்தப்பட்டவர் சட்டத்தை மீறுவதி முதற்கொண்டு தண்டனை கிடைக்கும் வரை உறுதிசெய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டங்கள் உள்ளதால், இந்த உரிமைகள் வழக்கு விசாரணையின் போது மதிக்கப்படுகின்றதா எனவும் உறுதி செய்ய வேண்டும்.
  • எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன செய்கின்றார்?
    • எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டப்பட்டவரை பிரதிபலிப்பதோடு அவர் நிரபராதி என நிருபிக்கவும் மற்றும் அவர்  குற்றவாளியென ஆதாரங்களுடன்  கண்டறியப்பட்டால் முடிந்தவரை தண்டனையை குறைக்கவும் முயற்சி செய்வார்.
  • சாட்சியாளர் என்ன செய்வார்?
    • சாட்சியாளர்கள் சாட்சி கூண்டுக்குள் அழைக்கப்பட்டு தங்கள் ஐம்புலன்களாலும் எதை உணர்ந்தனர் என விளக்குமாறு பணிக்கப்படுவார்.  சாட்சிகள் "நான் ஒரு நபர் கூச்சலிட்டதை கேட்டேன்" என்று சொல்ல முடியும். ஏனெனில் அவர் நேரடியாகக் கேட்டுள்ளார். மற்றும் அந்த நபர் கூச்சலிட்டதை கேட்டு இன்னொரு நபர் கூறினார் என்பதல்ல. சாட்சி நடுநிலையானவர் மற்றும் குறிப்பிட்ட நிகழ்வை வெளிச்சத்திற்கு கொண்டுவர உண்மையை மட்டுமே கூறப் பணிக்கப்படுவார்.

 

  • நீதிமன்றச் செய்தியாளர் என்ன செய்வார்?
    • கனடாவில் நியாயமான ஒரு விசாரணையின் உத்தரவாதம் பொதுமக்களின் செயல்முறை உண்மையைச் சார்ந்திருக்கின்றது. ஆகவே நீதிமன்ற அறையில் என்ன நடக்கின்றது என்பதை செய்தியாளர் உடனுக்குடன் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவார். சில சமயங்களில் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தனியுரிமை கருதி பொதுமக்கள் பக்கம் மூடப்பட்டிருக்கும்.

 

  • நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரி என்ன செய்வார்?
    • பாதுகாப்பு அதிகாரி முழு நடவடிக்கையின் போது பாதுகாப்பை உறுதி செய்வார். நீதிமன்ற அறைக்கு முறையற்ற வகையில் நுழைய முற்படுபவர்களை தடுத்தல் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆக்கிரோசமாக இருந்தால் தலையிட முடியும்.

 

  • நடுவர் என்ன செய்வார்?
    • நடுவர் மக்கள் தொகையின் சீரான தேர்வாகும். குடிமக்களாலான சீரற்ற சனத்தொகையின் தேர்வு மற்றும் தண்டனை ஒரு சமூக முடிவு எனவும் உறுதிப்படுத்துவார். (சமூக மதிப்புகளைப் பிரதிபலிக்கின்றது) அவர்கள் விசாரணை முழுவதும் சமூகமாகி இருப்பார்கள் மற்றும் இருதரப்பு விசாரணை முடிந்தபின்பு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என முடிவு செய்வார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், நீதிபதி தண்டனையை முடிவு செய்வார்.

 

  • குற்றஞ்சாட்டப்பட்டவர் என்ன செய்வார்?
  • குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணை முழுவதும் சமூகமாகி இருப்பார். அவர்கள் அமைதி காப்பதற்கு உரிமையுண்டு. ஆகையினால் அவர்கள் சாட்சியளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் சாட்சியளிக்க விரும்பினால், நீதிபதி கேட்கும் போது மட்டுமே செய்யமுடியும்.

சாட்சியளிப்பதன் முக்கியத்துவம் என்ன?

  • நீங்கள் நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டிருந்தால் (ஒரு சம்மன் நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கப்பெற்றால்) சாட்சியளித்தல் கட்டாயமாகின்றது. எப்படியாயினும், உங்களுக்கு சம்மன் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சாட்சியளிக்க விருப்பமா, இல்லையா என்பதைத் தெரிவு செய்யலாம்.
  • நீதிமன்றத்தில் சாட்சியளித்தல் உங்களை நீங்களே  வலுவூட்டும் ஒரு வழி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். அத்தோடு, சாட்சியளிக்கும் சூழ்நிலை உங்களுக்குத் தீமை விளைவித்தவரின் செயற்பாடு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, அவர் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்ட அதிகாரங்கள் சிலவற்றை மீளப்பெறுவதற்கான ஒரே வழியுமாகும்.
சாட்சியளிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்ன?நீங்கள் நீதிமன்றத்தில் சாட்சியளிக்கும் போது ஒரு கட்டுப்படுத்தப்படுகின்றது சத்தியப்பிரமாணத்தினால் உண்மையைக் கூறும்படி கட்டுப்படுத்தப்படுகின்றது. நீங்கள் பொய் கூறினால், சட்ட விதிமுறைகளில் பொய்வாக்குமூலம் என்று அழைக்கப்படுவதைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் உண்மையைக்  கூறாமல் நீதிமன்றத்தை அவமதிக்கின்றீர்கள் என்று பொருள் (சிறைத்தண்டனை அல்லது அபராதத்துக்கு உட்படும்)
  • உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் ஞாபகம் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
    • முதலாவதாக, இப்படி  நடந்தால் நீங்கள் பதற்றப்பட வேண்டியதில்லை. அக்கேள்விக்கு பதில் ஞாபகம் இல்லை என்பதை நீதிபதியிடம் கூற முடியும் மற்றும் வழக்கறிஞர் அடுத்த கேள்விக்கும் போக முடியும்.

 

  • உங்களிடம் ஒரு சங்கடமான கேள்வி கேட்கப்பட்டால்?
    • நீதிமன்ற அறையில் எவரும்  உங்களை மதிப்பீடு செய்யவோ அல்லது தர்மசங்கடத்தில் ஆழ்த்தவோ மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். சங்கடமான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் உங்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விபரத்தைக் கேட்டறிந்து உங்கள் நிலைமையை மதிப்பீடு செய்து உங்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவதன் நோக்கமாகும்.
  • உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி உங்களுக்கு விளங்கவில்லை என்றால்?
    • கேள்வி கேட்டவரை அதை மறுபடியும் கூறுமாறு அல்லது விளங்கப்படுத்துமாறு  கேட்கத் தயங்க வேண்டாம். குறிப்பாக உங்களுக்கு கனடியச் சட்டவிதிமுறைகள் தெரிந்திராத போது, கேள்வி விளங்கவில்லை என்றால் அதில் எந்தவிதமான அவமானமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
  • உங்களிடம் ஒரே நேரத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டால்?
    • நீங்கள் அவர்களிடம் கேள்விகளைப் பிரித்து ஒவ்வொன்றாகக் கேட்கும்படியும் நீங்கள் தனித்தனியாக விடையளிப்பதாகவும் கூறலாம். நீங்கள் முடிந்தளவிற்கு உங்களுக்கு யோசிப்பதற்குத் தேவையான நேரத்தை எடுத்து துல்லியமாகப் பதிலளித்தல் முக்கியமானது.

 

  • நான் சாட்சியளித்து முடிந்தபின் என்ன நடக்கும்?
    • நீங்கள் சாட்சியளித்து முடிந்தபின் நடைமுறைகள் விசாரணை காலம் முடியும் வரை செல்லும். நீதிபதி விசாரணையின் போது கேட்டவற்றையெல்லாம் மனதில் வைத்துத் தீர்ப்பு எழுத நேரம் எடுக்கும். உங்கள் வாதத்தை நிரூபித்து நீதிபதியின் கருத்துப்பதிவை ஏற்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பு. ஆகவே சாட்சியளிப்பது மிகவும் முக்கியமானது.  அத்தோடு இது ஒரு வலுவூட்டக் கூடிய அனுபவமுமாகும். உங்களுக்கு தீமை விளைவித்தவரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை வெளிப்படுத்த உங்களுக்கத் தனிப்பட்ட ரீதியாகக் கிடைத்த வாய்ப்பாகும்.